குளிர்காலத்தில் ஆற்றலை அள்ளி தரும் பேரீச்சம் பழம்!!

குளிர்காலத்தில் பேரீச்சம் பழங்களை சாப்பிடுவதால், உடலின் தொற்று நோய்களை எதிர்த்துப் போராடும் திறன் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், ஆற்றலையும் மேம்படுத்துகிறது.

பேரீச்சம் பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடெண்ட்கள் மற்றும் வைட்டமின்கள், நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில், முக்கிய பங்கு வகிக்கின்றன என்கின்றனர், நிபுணர்கள்.

சிறிது நீரில் இரண்டு அல்லது மூன்று பேரீச்சம்பழம், ஒரு சிட்டிகை கருப்பு மிளகு மற்றும் ஏலக்காய் துாள் சேர்த்து கொதிக்க வைக்கவும். இந்நீரை படுக்கும் முன் குடித்து வந்தால், சளி குறையும்.

இதில் குளுகோஸ், ப்ரக்டோஸ், சுக்ரோஸ் போன்ற இயற்கையான இனிப்புகள் நிறைய உள்ளது. இது, ரத்த சர்க்கரையை துரிதமாக அதிகரித்து, உடலுக்கு ஆற்றலை வழங்கும்.

போதிய நார்ச்சத்து இல்லாத உணவுகளை உண்ணும் போது ஏற்படும் மலச்சிக்கலை தீர்க்க, பேரீச்சம் பழம் உதவுகிறது.

இதில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அவை, இதயத்தின் செயல்பாட்டுக்கு மிகவும் உதவுகிறது.

ஒரு பேரீச்சம் பழத்தில், 2 மி.கி இரும்புச்சத்து உள்ளது. ரத்த சோகை பிரச்னை உள்ளவர்கள், மூன்று பேரீச்சம்பழங்களை நீரில் ஊற வைத்து எடுக்கலாம். சீரான ரத்த ஓட்டதிற்கு உதவும்.

இதில் உள்ள மெக்னீசியம், டிரிப்டோபான் அமினோ அமில மூலக்கூறுகள் நல்ல தூக்கத்தை தரும். தினமும் துாங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன், 2 பழங்களை சாப்பிடவும்.