ரோட்டுக்கடை ஸ்பெஷல் மோமோஸ்: வீட்டிலேயே ஈசியா செய்யலாம்..!
மைதா மாவு கொண்டு சைவம் மற்றும் அசைவத்தில் செய்யப்படும் மோமோஸ்களை விரும்பதாவர்களே இருக்க மாட்டார்கள். எல்லோரும் விரும்பும் வெஜ் மோமோஸை வீட்டிலேயே எளிதாக செய்வது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இதெல்லாம் தேவை: மைதா -1.1/2 கப், உப்பு - 1ஸ்பூன், எண்ணெய் - 2 ஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது - 1ஸ்பூன், மிளகாய் தூள் - 1ஸ்பூன்
முட்டைகோஸ் துருவல் - 1கப், கேரட் துருவல் - 1கப், சோயா சிரப் - 1ஸ்பூன், கொத்தமல்லி தழை - 1/2கப், பச்சை மிளகாய் - 2(நறுக்கியது), பெரிய வெங்காயம் - 1(நறுக்கியது)
செய்முறை: பவுலில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு அந்த மாவை சுமார் 2மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
அடுப்பில் கடாய் வைத்து சூடானதும், அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், வெங்காய் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்க வேண்டும்.
அடுத்து நறுக்கி வைத்துள்ள முட்டைகோஸ் துருவல், கேரட் துருவல் சோயா சிரப் சேர்த்து பாதியளவு வேக வைக்கணும். நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து கிளறி இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஊற வைத்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி அதை, சப்பாத்தி கட்டையில் சிறிய சப்பாத்தி அளவிற்கு தேய்து அதில் வேகவைத்துள்ள மசலா கலவையை வைத்து சிறிது சிறிதாக உருட்டி கொள்ள வேண்டும்.
இறுதியாக அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து, தண்ணீர் ஊற்றி கொதித்ததும், இட்லி தட்டின் மேல் மோமோஸை வேகவைத்து எடுக்கணும்.
தக்காளி சட்னி, புதினா சட்னியுடன் பரிமாறினால் சுவையான ரோட்டுகடை மோமோஸ் தயார்.