ஆடி மாத ஸ்பெஷல் மாவிளக்கு ரெசிபி இதோ!

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், துருவிய வெல்லம் - ஒன்றரை கப், நெய் - ஆறு மேஜைக்கரண்டி.

செய்முறை: பச்சரிசியை நீர்விட்டு ஒரு மணி நேரம் ஊறவிடவும். ஊறியதும் வடிகட்டி நிழலில் உலர்த்தவும்.

ஓரளவு உலர்ந்ததும், மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அதை ஒரு பாத்திரத்தில் போடவும்.

பிறகு, வெல்லத்தை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி மாவில் சேர்க்கவும். நான்கு மேஜைக்கரண்டி நெய்யையும் சேர்க்கவும்.

மூன்றையும் நன்றாக கலந்து உருண்டையாக உருட்டி, நடுவில் குழி செய்து, நெய் விட்டு திரி போட்டு மாவிளக்காக ஏற்றவும்.

குறிப்பு: ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய்க்கிழமைகளில் வீட்டில் மாவிளக்கு ஏற்றுவது வழக்கம்.

குலதெய்வத்துக்கு வழிபடும் போதும், ஆடி மாதம் கோவில்களிலும் இந்த மாவிளக்கை ஏற்றுவர்.