சத்துகள் நிறைந்த முருங்கைக்கீரை கேழ்வரகு அடை

தேவையானப் பொருட்கள்: முருங்கை கீரை - 1 கப், கேழ்வரகு மாவு - 1 கப்

பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய், எண்ணெய், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.

கேழ்வரகு மாவுடன் சுத்தம் செய்த முருங்கை கீரை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போடவும்.

இதில் தண்ணீர் கலந்து சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து அடையாக்கவும்.

தோசைக்கல் சூடானவுடன் சிறிது எண்ணெய் தடவி அடையை இருபக்கமும் திருப்பிப் போட்டு வேக வைக்கவும்.

இப்போது, கால்ஷியம், இரும்பு மற்றும் நார் சத்துகள் நிறைந்த, 'முருங்கைக்கீரை கேழ்வரகு அடை' ரெடி. சைடு டிஷ் ஆக தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவை அள்ளும்.