ஆகஸ்ட் வரை பதநீர் சீசன்! நன்மைகள் அறிவோமா!

பனைமரத்தில் நுங்கு உருவாகும் முன் நுனிப்பகுதியை லேசாக அறுக்கும் போது சொட்டு சொட்டாக ஒரு திரவம் வரும்.

இதை சேகரிக்கும் பானையின் உட்புறம் சுண்ணாம்பு தடவினால் கிடைப்பது பதநீர். சுண்ணாம்பு தடவாவிட்டால் அவை கள்ளாகிவிடும்

பதநீரில் கால்சியம், வைட்டமின் சி, பி, பாஸ்பரஸ், மெக்னீசியம், புரதச்சத்து, துத்தநாகம், தயாமின், மற்றும் நிகோனிக் அமிலம் உள்ளிட்ட சத்துகள் நிறைந்துள்ளன.

கோடையில் ஏற்படும் வயிற்றுப்புண், உடல்சூடு, மூலச்சூடு, வெள்ளைப்படுதல், வெட்டை நோய்கள், மலச்சிக்கல் உள்ளிட்ட பல பிரச்னைகளை தீர்க்கும்.

கல்லீரல், மண்ணீரல் வீக்கம், சிறுநீரக கோளாறுகள், பித்தம் அதிகரித்தல் உள்ளிட்ட பாதிப்புகளை போக்கும்.

கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் எலும்பு தேய்மானம், மூட்டுவலி, பற்கள் கோளாறுகள் உள்ளிட்டவைகள் நீங்கும்.

காலையில் பதநீர் அருந்தினால், சக்தி கூடும்; பல நோய்கள் அகலும். மேலும் இதில் கருப்பட்டி, பனங்கற்கண்டு உள்ளிட்டவை தயாரிக்கலாம்.