மாதவிடாய் காலத்தில் மருந்தாகும் அற்புத உணவுகள்..!

மாதவிடாய் போது நீங்கள் நன்றாக உணரவும், சுறுசுறுப்பாக இருக்கவும் உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய உணவுகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.

பேரீச்சம் பழத்தில் அதிகளவிலான இரும்புச்சத்து உள்ளது. இது மாதவிடாயின் போது ஏற்படும் இரும்புச் சத்து இழப்பைத் தடுக்க உதவியாக இருக்கும்.

வால்நட்ஸில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. மாதவிடாயின் போது ஏற்படும் பிடிப்புகள் மற்றும் அசவுகரியத்தை குறைக்க உதவும்.

இஞ்சிக்கு அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகளைக் கொண்டுள்ளது. இது மாதவிடாய் பிடிப்பை எளிதாக்க உதவும்.

வாழைப்பழத்தில் வைட்டமின் பி6 நிறைந்துள்ளது. இது மனநிலை மாற்றங்களைத் தடுக்கவும், மாதவிடாயின் போது சிலருக்கு ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவும்.

நெல்லிக்காயில் சிட்ரிக் அமிலம் அதிகம் உள்ளதால் ஆரோக்கிய நலன்களுக்காக ஆயுர்வேதத்தால் பரிந்துரைக்கப்படுகிறது. மாதவிடாய் காலத்தில் தினமும் ஒன்று உண்ணலாம்.