தக்காளியை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

தக்காளியை பச்சையாக, சுத்தம் செய்து சாப்பிடும் போது, ஏராளமான சத்துகள் உடலுக்கு கிடைக்கின்றன. உடல் பலவீனமாக உள்ளவர்களுக்கு, இது ஒரு சிறந்த டானிக் ஆக உள்ளது.

இதில், வைட்டமின் ஏ, பி மற்றும் சி, சுண்ணாம்புச்சத்து, பொட்டாசியம் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

இது ரத்தத்தைச் சுத்திகரிக்கவும், சீரான ரத்த ஓட்டத்துக்கும் பயன்படுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

தக்காளியை சூப் செய்து தினமும் சாப்பிட சரும நோய்களை தவிர்ப்பதுடன், பளபளப்பு கிடைக்கும்.

இதிலுள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி, குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. வைட்டமின் கே எலும்பு ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

நெஞ்செரிச்சல், இரப்பை கோளாறு, கல்லீரல் பாதிப்பு போன்ற பிரச்னைகளுக்கு தக்காளியை தொடர்ந்து சாப்பிடுவது உகந்தது.

நீரிழிவு, மலச்சிக்கல், ரத்தசோகை போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் தக்காளியை தொடர்ந்து சாப்பிட நிவாரணம் கிடைக்கும்.

இதிலுள்ள வைட்டமின் சி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உடம்பில் அதிகளவு கொழுப்பு சேர்தல், மாரடைப்பு அபாயத்தை தவிர்க்க உதவுகிறது.

இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளதால், உடல் எடை குறைப்பு பயணத்துக்கு உகந்த ஒன்றாகும்.