வெயிலுக்கு இதமான வாழைத்தண்டு மோர் ரெசிபி
தேவையான பொருட்கள்: வாழைத்தண்டு - 1 துண்டு, கறிவேப்பிலை, இஞ்சி, உப்பு - சிறிதளவு
கெட்டித் தயிர் - 1 கப், தண்ணீர் - தேவையான அளவு.
வாழைத்தண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
இதை கெட்டித் தயிர், கறிவேப்பிலை, இஞ்சியுடன் அரைத்து சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.
பின் வடிகட்டி தேவையானளவு உப்பு சேர்த்தால், சுவையான வாழைத்தண்டு மோர் ரெடி.
கோடைகாலத்துக்கு உகந்த, தாகம் தணிக்கும் இந்த மோரை அனைவரும் விரும்பிக் குடிப்பர்.