அடிக்கடி பிரியாணி சாப்பிடலாமா?

வாரத்துக்கு ஓரிரு நாட்கள் பிரியாணி சாப்பிடுவதில் தவறில்லை. அதேவேளையில், வீட்டில் சமைக்கப்பட்டால் ஆரோக்கியமானது.

ஹோட்டல் பிரியாணி என்றால் எண்ணெய், மசாலா என அனைத்தும் அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடும்.

அடிக்கடி இதை சாப்பிடுவதை முடிந்தளவு தவிர்க்கலாம். அளவுக்கு மீறி சாப்பிடுவதும் தவறாகும்.

அதில் சேர்க்கப்படும் அரிசி, இறைச்சி, எண்ணெய் என அனைத்தும் அளவு மீறும்போது உடல்நலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

எப்போதுமே ஃபிரெஷ்ஷாக சமைத்தது ஆரோக்கியமானது. ஏற்கெனவே சமைத்து பிரிட்ஜில் வைத்து மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு கேடானது.

அசைவ பிரியர்களின் தொண்டையில் எதிர்பாராவிதமாக எலும்பு ஏதாவது சிக்கினாலோ அல்லது அசைவத்தில் நச்சுத்தன்மை இருந்தாலோ மட்டும் மரணத்துக்கு வாய்ப்புள்ளது.

டிரெண்டிங் காரணமாக நள்ளிரவில் பிரியாணி சாப்பிட்டால், அந்த நேரத்தில் உணவை செரிக்க செரிமான மண்டலம் தயாராக இருக்காது.

வேலை காரணமாக நள்ளிரவில் சாப்பிட்டால், மறுநாள் மாலை வரை எதுவும் சாப்பிடக்கூடாது. இரவில் பிரியாணி உட்கொண்டு, மறுநாள் காலை உணவை வயிறு முட்ட முயற்சிப்பது தவறானது.