மலச்சிக்கலை போக்கும் காட்டுயானம் அரிசி!!
காட்டுயானம் அரிசி 7 அடிக்கு மேல் உயரமாக வளர்கின்றன. அதனால் இந்த ரக பயிருக்கு மத்தியில் யானை கூட மறைந்துவிடும் என கூறப்படுகிறது.
இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தோல் பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கிறது.
நார்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வாக காட்டுயானம் அரிசி உள்ளது.
காட்டுயானம் அரிசி செல்கள் மற்றும் நரம்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
இதில் உள்ள போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 குறைபாடு பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகையை போக்கும்.
இதில் உள்ள அமினோ அமிலம் செரிமானம் மேம்படுத்தும். மேலும் உடலில் எலும்பு வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
காட்டுயானத்தில் உள்ள ஆந்தோசயின் முதுமையை தள்ளிப்போட உதவும். மேலும் சரும சுருக்கத்தை தாமதப்படுத்தும்.