பனீர்... அளவாகச் சாப்பிடும் வரை அமிர்தம்...!

பசும்பால் அல்லது எருமை பாலில் எலுமிச்சை சாறு அல்லது வினிகர் சேர்த்துத் திரிய வைத்து செய்வதுதான் பனீர். இன்று சந்தையில் ஏகப்பட்ட உணவு நிறுவனங்கள் பனீர் தயாரித்து விற்கின்றன.

பனீரின் சுவைக்காக பலர் இதனை விரும்பி வாங்குகின்றனர். இதன் சாதக, பாதகங்கள் என்னென்ன எனப் பார்க்கலாம்.

பாலாடைக் கட்டி அல்லது பனீர் சாப்பிடுவதால் உடலுக்கு பலவித நன்மைகள் உள்ளன. இதில், அதிகளவு கால்சியம் மற்றும் வைட்டமின் டி உட்பட பல்வேறு சத்துகள் நிறைந்துள்ளன.

ஆனால் இதில் அதீத கொழுப்புச்சத்து இருப்பதால் அதிகளவு உட்கொள்ளக் கூடாது. குறிப்பாக பருமனான, வளரும் குழந்தைகளுக்கு குறைவாகவே தர வேண்டும்.

அளவுக்கதிகமாக சாப்பிட்டால் வயிற்று மந்தம் மற்றும் உடற்பருமனை ஏற்படுத்தும்.

பெண்களுக்கு இளவயதிலும் மெனோபாஸுக்கு முந்தைய நிலையிலும் மார்பகப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது; தொடர்ந்து பனீர் சாப்பிட இதற்கான வாய்ப்புகள் குறையும்.

நடுத்தர வயதுப் பெண்களுக்கு ஏற்படும் எலும்பு, மூட்டு நோயான ஆஸ்ட்ரியோபோரோஸிஸ் தடுக்க உடலுக்கு அதிகளவு கால்சியம் தேவை. இதை உட்கொள்வதால் எலும்புகளும், பற்களும் வலுவாகும்.

நீரிழிவால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த கொழுப்பு குறைவான பனீர் உதவுகிறது. இவர்கள் வெறும் பனீர் மீது பெப்பர் தூவி, அளவாகச் சாப்பிடலாம்.