மன அழுத்தத்தை குறைக்க உதவும் 7 பழங்கள்

வைட்டமின் சி நிறைந்த பழங்களை உட்கொள்வது மன அழுத்தத்தை குறைக்கிறது. கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி அதிகளவில் காணப்படுவதால், நோய் எதிர்ப்பு சக்தியையும் பெறலாம்.

திராட்சையில் நீர் சத்து, சோடியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இது மன அழுத்தத்தை போக்க சிறந்த பழமாகும்.

வைட்டமின் சி அதிகளவில் நிறைந்த ஆரஞ்சு பழம், மன அழுத்தத்தை நீக்க உதவுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

வைட்டமின்கள், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துகள் வாழைப்பழத்தில் காணப்படுகின்றன. மன அழுத்தத்தின் போது, இதை சாப்பிடுவது நன்மை பயக்கும்.

கிவி பழத்தில் இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலம் நிறைந்துள்ளது. இது, மன அழுத்தத்தை சமாளிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மாதுளை... இது ரத்தத்திலுள்ள தீங்கு விளைவிக்கும் எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. இதனால், மன அழுத்தத்தைக் குறைந்து இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.

அவகேடோ... இதிலுள்ள கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ மூளையின் செயல்பாட்டுக்கு உதவுகிறது; மேலும், மன அழுத்தத்தையும், தூக்கத்தையும் மேம்படுத்தக்கூடும்.

தினமும் பழங்கள் சாப்பிடுபவர்களுக்கு மற்றவர்களை விட மன அழுத்தம் தொடர்பான நோய்கள் 21 % குறைவாக ஏற்படுவதாக சமீபத்தில் நடந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.