கேக்கில் புற்றுநோய் ரசாயனங்கள்: உணவு துறை ஆய்வில் அதிர்ச்சி
ரெட் வெல்வெட், பிளாக் பாரெஸ்ட் கேக்களில் புற்று நோய்க்கு காரணமாகும் பொருட்கள் சேர்க்கப்படுவதை, பெங்களூருவில் உணவுத்துறை நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
சில தின்பண்டங்களில், அபாயமான செயற்கை நிறங்கள் சேர்க்கப்படுகின்றன. இவைகள் உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கோபி மஞ்சூரியன், சிக்கன் 65, பிஷ், மட்டன் கபாப்களில் செயற்கை நிறம் சேர்க்க, உணவுத்துறை தடை விதித்திருந்தது.
சிறார்கள் விரும்பி சாப்பிடும் பஞ்சு மிட்டாயிலும் செயற்கை நிறங்களை சேர்க்க கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
செயற்கை நிறங்களால், அலர்ஜி, ஆஸ்துமா, புற்றுநோய், அஜீரண கோளாறு, தலைவலி, சரும பிரச்னை, சுவாச கோளாறு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம் என, ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதை தீவிரமாக கருதிய உணவுத்துறை, கேக் தயாரிப்போர், உணவு பாதுகாப்பு, தரக்கட்டுப்பாட்டு துறை உத்தரவை பின்பற்ற வேண்டும், இல்லையென்றால் நடவடிக்கை எடுப்பதாக எச்சரித்துள்ளது.
இவற்றில் சேர்க்கப்படும் பொருட்கள் புற்று நோய்க்கு காரணமாகும்; இத்தகைய கேக்குகள் சாப்பிட தகுந்தது அல்ல என்பது ஆய்வில் தெரிய வந்தது.