குளிர்காலத்தில் ஆரோக்கியம் தரும் உணவுகள்

குளிருக்கு இதமாக சூடான உணவுகளையே பலரும் விரும்புவர்.

ஆனால், மற்ற பருவங்களை விட நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமுள்ள உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

புரதச்சத்து, நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்துள்ள வேர்க்கடலையை அவ்வப்போது சாப்பிடலாம்.

கீரைகள், பீட் ரூட், கேரட் போன்ற வேர்க் காய்க்கறிகளை சாப்பிடலாம்.

முட்டை மற்றும் மீன் போன்ற இறைச்சி உணவுகளை எடுக்கலாம்.

குளிர்காலத்தில் உங்களை எள் சூடாக வைத்திருக்கும். நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் பி உட்பட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன.

வைட்டமின் சி சத்து நிறைந்துள்ள நெல்லிக்காய், செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதயம் , கூந்தல் ஆரோக்கியத்துக்கு கைக்கொடுக்கிறது.

பாரம்பரிய இனிப்புச்சுவையுள்ள வெல்லத்தில், இரும்புச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், கால்சியம் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.