ஹெல்த்தியான கொள்ளு இட்லி ரெசிபி இதோ

தேவையானப் பொருட்கள்: இட்லி மாவு - 2 கப், கொள்ளு - 1 கப்.

புளித்த தயிர் - சிறிதளவு, உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.

கொள்ளுப்பருப்பை, ஆறு மணி நேரம் நீரில் ஊற வைத்து மாவாக அரைக்கவும்.

அதில், தயிர், இட்லி மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

பின், இட்லி தட்டில் வழக்கம்போல் ஊற்றி அவிக்கவும்.

இப்போது சத்தான மற்றும் சுவையான கொள்ளு இட்லி ரெடி. கொத்தமல்லி கீரை சட்டினி தொட்டு சாப்பிட சுவை அள்ளும்.