தீபாவளி ஸ்பெஷல்... மெட்ராஸ் மிக்ஸர் ரெசிபி இதோ
தேவையானப் பொருட்கள்: ரிப்பன் பகோடா மற்றும் தேன்குழல் - கொஞ்சம், ஓமப்பொடி, காராபூந்தி - தலா ஒரு கப், அவல், வேர்க்கடலை, பொட்டுக்கடலை - தலா அரை கப்.
கறிவேப்பிலை - கால் கப், மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி, உப்பு - அரை தேக்கரண்டி, பெருங்காயப் பொடி - கால் தேக்கரண்டி, எண்ணெய் - பொரிக்க.
ரிப்பன் பக்கோடா மற்றும் தேன்குழலை நொறுக்கி வைத்து கொள்ளவும். வேர்க்கடலை, பொட்டுக் கடலை, கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித் தெடுக்கவும்.
அவலை கடைசியாக கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வடி கரண்டியில் போட்டு பொரித்துக் கொள்ளவும்.
அவல் பொரிக்கும் போது எண்ணெய் கலங்கல் ஆகிவிடும். அதனால், அவலை எப்போதும் கடைசியில் தான் பொரிக்க வேண்டும்.
பொரித்தவற்றிலுள்ள எண்ணெயை வடியவிட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டு ஒன்றாக கலந்து கொள்ளவும்.
பின்னர், மிளகாய்ப்பொடி, பெருங்காயப்பொடி, கலந்து மிக்ஸரில் துாவி கலந்தால், சுவையான மெட்ராஸ் மிக்ஸர் ரெடி.