சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுகள் சில
வெங்காயத்தில் இயற்கையாகவுள்ள புரோஸ்டாக்லாண்டின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுவதுடன், உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
முள்ளங்கியில் சோடியம், பொட்டாசியம் மற்றும்
பாஸ்பரஸ் குறைவாக உள்ளது. வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடெண்ட்ஸ்கள்
உள்ளதால், சிறுநீரகங்களை பாதுகாக்க உதவுகிறது.
மஞ்சளில் குர்குமின், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன. இவை சிறுநீரக வீக்கம் மற்றும் ஃமைப்ரோஸிஸைக் குறைக்க உதவும்.
அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த பூண்டிலுள்ள மாங்கனீசு,
வைட்டமின் பி6 மற்றும் சல்பர் சேர்மங்கள் சிறுநீரக அழுத்தத்தை குறைத்து
நச்சு நீக்கத்தை எளிதாக்குகிறது.
சிவப்பு திராட்சையில்
அதிகளவு ஆன்டி ஆக்ஸிடெண்டுகள் உள்ளதால், வீக்கத்தை குறைப்பதுடன்,
சிறுநீரகத்தில் கல் உருவாவதை தடுக்க உதவுகிறது.
சிவப்பு குடை மிளகாயில், பொட்டாசியம், லைகோபின், ஆன்டி ஆக்ஸிடெண்ட்கள் உள்ளதால், புற்றுநோக்கு எதிராக செயல்படும் ஆற்றல் கொண்டது.
பூசணி விதையில் வைட்டமின் ஈ அதிகளவில் உள்ளது. நார்ச்சத்து, புரோட்டீன், இரும்புச்சத்து இருப்பதால், சிறுநீர்ப்பையில் கற்கள் உருவாகாமல் தடுப்பதோடு, வெளிப்புற சேதத்திலிருந்து காக்க உதவுகிறது.
முட்டைக்கோஸில் நிறைந்துள்ள பைட்டோ கெமிக்கல்,
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ப்ரீரேடிக்கல்களை உடைக்க உதவுகிறது;
சிறுநீரகங்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் திறன் கொண்டது.
எலுமிச்சை சாறிலுள்ள சிட்ரேட் கால்சியம் உருவாகாமல் தடுப்பதால், சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தவிர்க்கப்படுகிறது.
செர்ரி பழங்களில் அதிகளவு நார்ச்சத்து, வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடெண்ட்கள் அழற்சி எதிர்ப்பு மருந்தாகவும் செயல்படுகிறது.