உடலில் வலிமையை அதிகரிக்கும் 6 சைவ உணவுகள்
இயற்கையான சர்க்கரைகள், பொட்டாசியம், நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்த வாழைப்பழம் உடலுக்கு வலிமையை அளிப்பதுடன், சோர்வையும் நீக்குகிறது.
கார்போஹைட்ரேட்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ் உடலுக்கு தேவையான வலுவை தருவதுடன், உங்களை சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும்.
ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்த பாதாம், உடலுக்கு தேவையான வலிமையை அளிக்கிறது.
கீரையில் இரும்புச்சத்து, நைட்ரேட்கள் நிறைந்திருப்பதால், உடலில் ஆக்ஸிஜனை மேம்படுத்தி, வலுவை அதிகரிக்கிறது.
கார்போஹைட்ரேட்கள், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ள சர்க்கரைவள்ளி கிழங்கு நாள் முழுவதும் நீடித்த வலுவை தருகிறது.
தயிரில், புரதம், வைட்டமின் பி12 மற்றும் கால்சியம் உட்பட பல்வேறு சத்துகள் நிறைந்துள்ளன. செரிமானத்துக்கு உதவும் புரோபயாடிக்குகள் என்ற நல்ல பாக்டீரியாவும் உள்ளது.