பேரீச்சம்பழம் பால் பாயசம் ரெசிபி இதோ !
தேவையான பொருட்கள்: பசும் பால் - 500 மி.லி., பேரீச்சம் பழம் - 100 கிராம், முந்திரி பருப்பு - 50 கிராம், சர்க்கரை - 50 கிராம்
நெய், ஏலக்காய் பொடி, தண்ணீர் - தேவையான அளவு.
பேரீச்சம் பழத்தை விதை நீக்கி பொடியாக நறுக்கவும்.
அதை, பசும்பாலில் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
பின், சர்க்கரை, முந்திரி பருப்பு, ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கவும்.
இப்போது, சுவையானான 'பேரீச்சம்பழம் பால் பாயசம்' ரெடி.
இரும்பு, புரதம் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்த இந்த பேரீச்சம் பழ பாயசத்தை, அனைத்து வயதினரும் விரும்பி பருகுவர்.