இரவில் தூக்கம் வராமல் தவிக்கிறீர்களா... இந்த உணவுகளை முயற்சியுங்கள்!

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பால் நல்ல இரவு தூக்கத்தைத் தூண்டும். இதிலுள்ள டிரிப்டோபான் மெலடோனினாக மாறி, தூக்கத்தை மேம்படுத்தி, உடல் தளர்வைத் தூண்டும்.

கால்சியம், டிரிப்டோபான், மெக்னீசியம் உட்பட பல தூக்கத்தை ஊக்குவிக்கும் சேர்மங்கள் பார்லி புல்லில் நிறைந்துள்ளதால், வெது வெதுப்பான நீர், பாலில் கலந்து குடிக்கலாம்.

வால்நட்கள்... இவை ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டிருக்கின்றன. மேலும், விந்தணுக்களின் இயக்கத்தையும் மேம்படுத்தும்.

வறுத்த பூசணி விதைகள்... இதிலுள்ள டிரிப்டோபான், துத்தநாகம், தாமிரம் மற்றும் செலினியம் ஆகியவை தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும்.

வாழைப்பழத்தில் மெக்னீசியம், டிரிப்டோபான், வைட்டமின் பி6, மற்றும் பொட்டாசியம் போன்ற தூக்கத்தை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

டிரிப்டோபான் நிறைந்த சியா விதைகள் மனநிலையை மேம்படுத்தி, தூக்க முறைகளை ஒழுங்குபடுத்துவதால், ஊறவைத்த விதைகளை இரவில் உட்கொள்ளுங்கள்.