மலச்சிக்கலை சீராக்க உதவும் 5 உணவுகள்
மாறி வரும் உணவு முறை காரணமாக நாம் சந்திக்கும், உடல் ரீதியான பிரச்னைகளில் ஒன்று மலச்சிக்கல்.
உணவிலுள்ள சத்துகள் உடலால் உறிஞ்சப்பட்டு, மீதம் கழிவாக
வெளியேறும். ஆனால் அப்படி நடக்காமல் அவை உடலில் தேங்குவதால், நச்சுகள்
அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
எனவே, மலச்சிக்கலை தவிர்க்க உதவும் சில உணவுகள் இதோ...
இஞ்சி...
கீழ் குடலிலுள்ள அழுத்தத்தை இது குறைக்கிறது. வெல்லத்துடன் இதை கலந்து
உட்கொண்டால், வாதம், கபத்தைக் கூட போக்கும்; மலத்தை தளர்த்தும்.
வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது செரிமானத்தை மேம்படுத்தி, உடலில் இருந்து நச்சுகளை அகற்ற செய்யும்.
மெக்னீசியம், இரும்பு, நார்ச்சத்து உட்பட பல்வேறு
ஊட்டச்சத்துகள் அத்திப்பழத்தில் நிறைந்துள்ளன. ஊறவைத்த 3 பழங்களை தினமும்
சாப்பிட மலச்சிக்கல் விலகும்.
ஆரோக்கியமான மாவுச்சத்து,
நார்ச்சத்து, வைட்டமின்கள் நிறைந்த கருப்பு உலர் திராட்சைகளை (5- 6) இரவில்
ஊற வைத்து, மறுநாள் வெறும் வயிற்றில் சாப்பிட குடல் இயக்கம் சீராகும்.
ஆரோக்கியமான குடலுக்கு, சிறுதானியங்களை தினசரி உணவில் சேர்க்க வேண்டும். குறிப்பாக மலச்சிக்கலுக்கு சிறு சோளம் அருமருந்தாக உள்ளது.