உடல் சுறுசுறுப்பாக தக்காளி ஜூஸ் சாப்பிடுங்க!

தக்காளியில் காய், பழம் இரண்டிலும் வைட்டமின் ஏ, பி, சி, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து, புரதச்சத்து ஆகியவை உள்ளன.

தக்காளியை பழமாகச் சாப்பிட்டாலும், சாறாக அருந்தினாலும், உடனே உடலில் கலந்து, சக்தியை ஊக்குவிக்கும். சாப்பிட்ட மற்ற உணவுகள் உடனே ஜீரணமாகும்.

தக்காளிச் சாற்றுடன் சிறிதளவு சர்க்கரை கூட்டி, சிறு குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் பலமும், சுறுசுறுப்பும் உண்டாகும்.

தக்காளி செடியை ஒன்றிரண்டாக நறுக்கி நீர் விட்டுக் காய்ச்சி வடிக்கட்டி குடித்து வர, சிறுநீர் எரிச்சல், உடல் வீக்கம், மேக நோய் முதலியவை குணமாகும். உடலும் பலம் பெறும்.

அதிகளவு வைட்டமின் 'ஏ', தக்காளியில் அதிகம் உள்ளது. அதனால், பார்வைக் கோளாறுகளுக்கும், உடல் பலவீனத்துக்கும் தக்காளி சாறை பருகி வந்தால் பிரச்னை தீரும்.

ரத்த சோகை நோய் உள்ளவர்கள், தக்காளி சாறை, வாரத்தில் 2 அல்லது 3 முறை அருந்தலாம். ரத்தம் உற்பத்தியாகும்.