வாங்க டீ சாப்பிடலாம்… இன்று சர்வதேச தேநீர் தினம்!

சர்வதேச தேநீர் தினம் நிலையான தேயிலை உற்பத்தி, வர்த்தகம் மற்றும் நுகர்வு ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சீனாவின் தேயிலை ஏகபோகத்துடன் போட்டியிட ஆங்கிலேயர்கள் 1824 இல் தேயிலை பயிரை வணிக ரீதியாக அறிமுகப்படுத்தினர்.

இந்தியாவில் அசாம், மேற்கு வங்கம், கர்நாடகா, தமிழகம், கேரளா மற்றும் சிக்கிம் போன்ற மாநிலங்களில் இது விளைகிறது. மன அழுத்தத்தை போக்கும் அருமருந்தாகவும் தேநீரானது இருக்கிறது.

தேநீர் அருந்துவது மூளையை சுறுசுறுப்படையச் செய்வதுடன், இதில் உள்ள catechin என்னும் வேதிப்பொருள் உடல் எடையை குறைப்பதற்கும் உதவிகிறது

க்ரீன் டீ மற்றும் ப்ளாக் டீ அருந்துவதால் மருத்துவரீதியாக பல நன்மைகள் கிடைக்கின்றன.

மாலை வேளை வந்ததும் டீ இல்லாமல் போகாது. அது ஒரு எமோஷன் என்று டீ பிரியர்கள் கருதுகிறார்கள். பிஸ்கட், போண்டா, வடை என அந்த கூட்டுடன், இனிய ஸ்நாக்ஸ் டைமிற்கு டீ வேண்டும்.

பால் இல்லாமல் தேநீர் குடிக்க முயற்சி செய்யுங்கள், ஏனெனில் இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும் சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரத்திற்கு பின்பும் டீ அருந்துவதை தவிர்க்க வேண்டும்.