கருஞ்சீரகம் இருந்தால் கணக்கில்லா பிரச்னை தீரும்!

கருஞ்சீரகத்தில், நார்ச்சத்துக்கள், அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து, சோடியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிகளவில் உள்ளன. மேலும் வைட்டமின் ஏ, பி, பி 12, சி சத்துக்களும் உள்ளன.

கருஞ்சீரகப்பொடியை கஞ்சியுடனோ, தேனுடனோ கலந்து சாப்பிடலாம். இதன் பொடியைச் சாப்பிட்டால் தாய்ப்பால் சுரக்கும்.

மேலும் வயிறு உப்புசம் குறையும். மோருடன் கலந்து சாப்பிட்டால் பசியைத் தூண்டும்.

கருஞ்சீரகம் 100 கிராம், வெந்தயம் 100 கிராம், ஓமம் 50 கிராம் எடுத்து பொடி செய்து மிளகு அளவு அல்லது ஒரு சிட்டிகை எடுத்து தினமும் தூங்கும் முன் உண்ணலாம்.

இதனால் தைராய்டு, பிட்யூட்டரி, மேமரி போன்ற சுரப்பிகள் சீராகும். மேலும் மார்பக புற்றுநோயில் இருந்து பாகாப்பு தரும்.

கருஞ்சீரகப் பொடியை வெந்நீர், தேன் கலந்து பருகினால் சிறுநீரகக் கற்களும் பித்தப்பைக் கற்களும் கரையும்.

வறுத்துப் பொடித்த கருஞ்சீரகத்துடன் தேன் அல்லது கருப்பட்டி கலந்து சாப்பிடலாம். மாதவிடாய்க் கோளாறு உள்ள பெண்களுக்கு இது நல்ல மருந்து.

பிரசவத்துக்குப் பின் கர்ப்பப்பையில் உள்ள அழுக்கை போக்க, ஒரு டேபிள்ஸ்பூன் கருஞ்சீரகப் பொடியுடன் பனைவெல்லம் சேர்த்துச் எடுத்துக்கொள்ளலாம்.