குழந்தைக்கு பாலூட்டும் பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்!

சால்மன் மீனில் டி.ஹெச்.ஏ நிறைந்துள்ளது. இது உடலில் ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்களை அதிகரிக்க உதவுவதுடன், மன அழுத்தத்தில் இருந்து தாய்மார்களை பாதுகாக்க உதவுகிறது.

மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. மேலும், எடை குறைக்க உதவுவதுடன், கல்லீரல் நச்சுத்தன்மையை குறைக்க உதவுகிறது.

ஓட்ஸில் இரும்புச்சத்து, புரோட்டீன், கால்சியம் மற்றும் கார்போஹைட்ரேட்ஸ் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. இதிலுள்ள நார்ச்சத்தால் எளிதில் செரிமானம் ஆவதுடன், மலச்சிக்கல் பாதிப்பு குறையக்கூடும்.

முழு கோதுமை ரொட்டி அல்லது பாஸ்தாவில் இரும்பு சத்துடன், தேவையான நார்ச்சத்தும் நிறைந்துள்ளது.

கர்ப்பிணி பெண்களை விட இளம் தாய்மார்களுக்கு அதிகளவு வைட்டமின் சி தேவைப்படுவதால், ஆரஞ்சு மற்றும் சிட்ரஸ் பழ வகைகளை எடுத்து கொள்வது அவசியம்.

பசலைக்கீரை, புரோக்கோலி போன்ற பச்சை காய்கறிகளில் வைட்டமின் - ஏ சத்து நிறைந்துள்ளது. இது தாய் மட்டுமின்றி குழந்தையின்ஆரோக்கியத்திற்கும் நல்லது.

ஊற வைத்த பாதாமை, தோல் நீக்கி தினமும் சாப்பிட, தாய்ப்பால் நன்கு சுரக்கக்கூடும்.

உடலுக்கு தேவையான புரோட்டீனை பெற எளிதான வழி தினமும் முட்டை எடுத்து கொள்வது தான். காலையில் முட்டை பொரியல், மதியம் அவித்த முட்டை மற்றும் இரவில் ஆம்லேட் என சாப்பிடலாம்.