தர்பூசணி விதையிலும் நன்மைகள் இருக்கு...

தர்பூசணி பழத்தில் மட்டுமல்ல அதன் விதைகளிலும் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.

இதில் மக்னீசியம், துத்தநாகம், இரும்புச்சத்து, புரதம், காப்பர், ஸிங்க், பொட்டாசியம், மெக்னீசியம் உள்ளிட்ட பல்வேறு சத்துகள் அடங்கியுள்ளன.

இதன் விதைகளில் கலோரிகள் மிக மிகக் குறைவு. விதைகளை வெயிலில் காய வைத்து வறுத்து சாப்பிடலாம். எடை குறைக்க விரும்புவோருக்கு ஏற்றது.

விதையில் உள்ள இரும்புச் சத்து, தாமிரச் சத்து ஆகியவை முடி உதிர்வை கட்டுப்படுத்தும். சரும வறட்சியைப் போக்கி ஈரப்பதமாக இருக்க செய்யும்.

இதில் அதிக அளவு துத்தநாகம் உள்ளதால் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த உதவும்.

உடலின் இயற்கையான வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துவதுடன் அதிகரிக்க செய்யும்.

நாம் வாங்கும் பழத்தில் உள்ள விதைகளை சேமித்துவைத்துச் சாப்பிடலாம். விதைகளைப் பயன்படுத்தி பர்பி, சத்து உருண்டை போன்ற ஸ்நாக்ஸ் செய்தும் உண்ணலாம்.