தீபாவளி ஸ்பெஷல்: ட்ரை ப்ரூட்ஸ் லட்டு ரெசிபி!
தேவையானவை: உலர் திராட்சை - கால் கப், நெய் - ஒரு மேஜைக்கரண்டி, கொட்டை நீக்கிய பேரீச்சை - ஒரு கப்
பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா, முந்திரி - தலா கால் கப்.
செய்முறை: பாதாம், பிஸ்தா, முந்திரியைப் பொடியாக நறுக்கவும்.
கொட்டை இல்லாத பேரீச்சையை மிக்ஸியில் சேர்த்து, கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
கடாயில் நெய்யை ஊற்றி சூடாக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து உலர் திராட்சை, பாதாம், பிஸ்தா மற்றும் முந்திரியை சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வறுத்தெடுக்கவும்.
இதனுடன் பேரீச்சையை சேர்க்கவும். பேரீச்சையை தட்டையான கரண்டியால் நசுக்கி, தொடர்ந்து கிளறவும்.
நெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைத்து, கை பொறுக்கும் சூட்டுக்கு ஆறவிட்டவும்.
ஆனால் முழுவதுமாக ஆறிவிடக்கூடாது; ஆறினால் லட்டு பிடிக்க வராது. உடனடியாக லட்டுகளாக உருட்டவும். ட்ரை ப்ரூட்ஸ் லட்டு ரெடி!