மழைக்காலத்தில் பால் பொருட்கள் அஜீரணத்தை உண்டாக்குமா?

பால் பொருட்களை மழைக்காலத்தில் கொஞ்சமாக எடுத்துக் கொள்வது நல்லது என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

காரணம் பொதுவாகவே பால் பொருட்கள் செரிமானம் ஆக மற்ற உணவுகளை காட்டிலும் மிக அதிக நேரம் எடுக்கும்.

அதேபோல் பனீர், சீஸ், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்களை அதிகமாக உட்கொள்ளும் போது மந்தமான உணர்வை உண்டாக்கும்.

இதன் எதிரொலியாக உடல் இயக்கம் குறையும் வாய்ப்பு உள்ளது. மேலும் அஜீரண கோளாறு கூட ஏற்படலாம்.

மழைக்காலத்தில் சைனசிடிஸ் பிரச்சனை உள்ளவர்கள் தயிர் போன்ற பால் உண்பதை தவிர்க்கலாம்.

இவை அலர்ஜி ஏற்படுத்தி இருமல் மற்றும் சளித் தொல்லைகளை அதிகரிக்கச் செய்யும்.