சர்க்கரைவள்ளி கிழங்கின் ஆரோக்கிய நன்மைகள் !

பொதுவாக, கிழங்கு வகைகளில் கொழுப்பு அதிகம் நிறைந்து காணப்படும். ஆனால், சர்க்கரைவள்ளி கிழங்கில் மிக குறைந்த அளவே கொழுப்பு உள்ளது.

வைட்டமின் சி நிறைந்துள்ள சர்க்கரைவள்ளி கிழங்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

உடலின் சதை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவும் சர்க்கரைவள்ளி கிழங்கை வயது வித்தியாசமில்லாமல் சாப்பிடலாம்.

நார்ச்சத்து நிறைந்துள்ளதால், செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. தொடர்ந்து சாப்பிட வாயு, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

இதிலுள்ள நார்ச்சத்து வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்துள்ளதால், உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்க, உணவில் சர்க்கரைவள்ளி கிழங்கு சேர்க்கலாம்.

சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ள பீட்டா கரோட்டின் பார்வையை மேம்படுத்தவும், கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

இதில், பொட்டாசியம் ஏராளமாக உள்ளதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

குளிர்காலத்தில், சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை அளித்தாலும், குறைந்த அளவே உட்கொள்ள வேண்டும்.