கோடையில் செரிமானத்தை மேம்படுத்த உதவும் காய்கறிகள் சில
வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ள தக்காளி, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. குறைந்த கலோரிகளே இதிலுள்ளன.
நார்ச்சத்து, மெக்னீசியம் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்த கீரைகள், செரிமானத்தை மேம்படுத்தும்
நார்ச்சத்து மற்றும் சல்பர் கலவைகள் நிறைந்துள்ள முட்டைக்கோஸ் செரிமானத்தை மேம்படுத்துகிறது; குடல் இயக்கத்தை சீராக்கும்.
முள்ளங்கி... நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. செரிமானத்தை மேம்படுத்துவதுடன், மலச்சிக்கலை தவிர்க்க உதவுகிறது.
கேரட்... குடல் இயக்கத்தை சீராக்க உதவுவதுடன், செரிமான மண்டலத்தில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
வெள்ளரிக்காய் மலச்சிக்கலை தவிர்க்க உதவுவதுடன், செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. கோடையில் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.
நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ள ப்ரோக்கோலி, குடலில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.