முருங்கையின் முத்தான சத்துகள் குறித்து அறிவோமா…

முருங்கையில், 90க்கும் அதிகமான சத்துகளும், மருத்துவ குணங்களும் இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. முருங்கையின் அனைத்து பாகங்களுமே, அதீத மருத்துவ குணங்களைக் கொண்டது.

ஆயுர்வேத மருத்துவம் முருங்கையை பற்றி குறிப்பிடும் போது, இது, 300 விதமான நோய்கள் வராமல் தடுக்கவும், 67க்கும் மேற்பட்ட நோய்களை குணப்படுத்தவும் பயன்படுவதாக கூறுகிறது.

உடலுக்கு தேவையான முக்கிய அமினோ அமிலங்கள் இவற்றில் அடங்கியிருக்கின்றன. மற்ற உணவுகளை விட இதில், 25 மடங்கு அதிகமாக இரும்புச்சத்து இருக்கிறது.

ரத்த விருத்தி குறைந்திருப்பவர்கள் மட்டுமல்ல அனைவரும், வாரத்தில் இரண்டு நாள் இந்தக் கீரையை சாப்பிட்டால், ரத்த சோகை வராமல் தடுக்கலாம். ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க துவங்கும்.

கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகப்படுத்தவும், கருப்பையின் வளர்ச்சியைச் சீராக்க செய்வதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

விந்து எண்ணிக்கையில் குறைபாடு இருக்கும் ஆண்களுக்கும் சிறந்த மருந்தாக செயல்படுகிறது.

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்கிறது. மேலும், பாலுாட்டும் தாய்மாருக்கும், குழந்தைக்குமான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

முருங்கை இலையில் கால்ஷியமும், மெக்னீசியம் சத்துக்களும் அதிகமாக இருப்பதால், பற்களுக்கும், எலும்புகளுக்கும் வலுவூட்டுகிறது.