ரத்த கசிவு பிரச்னைக்கு வைட்டமின் கே குறைபாடு காரணமா?

உடம்பில் வைட்டமின் கே குறைபாடு ஏற்பட்டால் உடலில் ரத்த கசிவு, மோசமான எலும்பு வளர்ச்சி, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகலாம்.

வைட்டமின் கே என்பது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின், இதில் புரோத்ராம்பின் என்ற புரதம் உள்ளது.

ஒரு நாளைக்கு சுமார் 90 மைக்ரோகிராம் வைட்டமின் கே உட்கொள்ள வேண்டும். இதை விட அதிகமாக எடுத்துக்கொள்வதால் ரத்தம் மெலிந்து அதுவும் ஆபத்தாகும். உடலில் வைட்டமின் கே சீரான அளவில் இருப்பது முக்கியம்.

ரத்த உறைதல் மற்றும் எலும்பு ஆரோக்கியம் தவிர இதய நோய்கள் ஏற்படுவதை தடுப்பதிலும் வைட்டமின் கே முக்கிய பங்கை கொண்டுள்ளது.

வைட்டமின் கே ரத்தத்தில் கால்சியத்தின் அளவை ஒழுங்குபடுத்துகிறது, இது எலும்புகளை பலப்படுத்துகிறது. உணவில் சிலவற்றை சேர்த்துக் கொள்வதன் மூலம் வைட்டமின் கே குறைபாட்டை எளிதில் சமாளிக்கலாம்.

ஆண்களுக்கு 120 எம்.சி., பெண்களுக்கு 90 எம்.சி. அளவும் தினசரி தேவை. வைட்டமின் கே1 அல்லது ஃபைலோகுவினோன் என்பது தாவரங்களிலிருந்து பெறப்படுகிறது. வைட்டமின் கே 2 அல்லது மெனக்வினோன் ஆனது விலங்குகளை அடிப்படையாக கொண்ட உணவுகளில் உள்ளது.

சைவம் உண்பவர்கள் கீரைகள், ப்ரக்கோலி உள்ளிட்ட பச்சை இலை காய்கறிகள், தாவர எண்ணெய்கள், நெல்லி, அத்தி பழங்கள், சீஸ், சுண்டல், சோயாபீன்ஸ், பச்சை தேயிலை தேநீர் போன்றவை உண்ணலாம்

அசைவம் சாப்பிடுபவர்கள் அனைத்து வகை இறைச்சிகள், முட்டை மஞ்சள் கரு, மற்றும் விலங்குகளின் கல்லீரல் எடுத்துகொள்ளலாம்.