ஆரோக்கியமான நட்ஸ் சாக்லேட் ரெசிபி இதோ!
குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் அவ்வளவு பிடிக்கும். இந்த சாக்லேட்டை வீட்டிலேயே இருந்தப்படி ஆரோக்கியமாக ஈஸியாக எப்படி செய்யலாம் என தெரிந்துக் கொள்வோம்.
இதெல்லாம் தேவை : கண்டன்ஸ்ட் மில்க் - 200 கிராம், கொக்கோ பவுடர் - 50 கிராம், வெண்ணை - 2 ஸ்பூன், பொடித்த முந்திரி, பாதாம், வால்நட் தேவைக்கேற்ப
ஒரு பாத்திரத்தை முதலில் சூடுப்படுத்தி அதில் கண்டன்ஸ்ட் மில்க் முழுவதையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
சில நிமிடம் கழித்து கண்டன்ஸ்ட் மில்க் இலகி வரும் பொழுது 50 கிராம் கொக்கோ பவுடரை கொஞ்சம் கொஞ்சமாக சலித்து கலக்க வேண்டும்.
கிளற, கிளற சிறிது வினாடிகள் கழித்து கொக்கோ பவுடர் கண்டன்ஸ்ட் மில்கில் நன்றாக கலந்து சாக்லேட் போன்ற கெட்டியான பதத்திற்கு வந்துவிடும்.
அதில் பொடித்து வைத்த முந்திரி, வால்நட், பாதாமை சேர்க்க வேண்டும். நிறைவாக வெண்ணெய் சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக கலந்து ஒரு சதுரத்தட்டில் நன்கு படிய சாக்லேட் கலவையை தடவவேண்டும்.
அதை பிரிட்ஜில் வைக்கவும். நன்கு உறைந்ததும் தேவையானளவு வெட்டிப் பரிமாறலாம். நட்ஸ் சாக்லேட் ரெடி.