பூஞ்சைத் தொற்று களையும் மங்குஸ்தான் ப்ரூட்

மலேசியா, மியான்மர், இந்தோனேஷியா, தாய்லாந்து நாடுகளில் அதிகம் விளையும் பழம் மங்குஸ்தான்.

இது ஒரு மருத்துவ குணம் நிறைந்த பழ வகை. தென்கிழக்கு ஆசியநாடுகளில் பழங்காலத்தில் தோல், பற்களின் ஈறு நோய்களுக்கும், பல்வலி, தொற்நோய் கிருமிகளையும், பூஞ்சைகளையும் அழிக்க அதிகம் பயன்படுத்தினர்.

குற்றாலம், கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களில் மங்குஸ்தான் பழம் விளையும்.

மங்குஸ்தான் பழத்தின் தோல் தடிமனாக இருக்கும். தோல் பகுதியை பிளந்தால் மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும்

மங்குஸ்தான் பழம் வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைப் போக்கும் தன்மை உடையது. வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு.

வாய் துர்நாற்றத்தை நீக்கவும் சிறந்த மருந்து. இந்த பழத்தின் தோல் பல் வலிக்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

உடல் சூட்டைத் தணித்து தேகத்தை சமநிலையில் வைத்திருக்கும். மூலநோயை குணப்படுத்தும்.

மனநோய்க்கான மருந்தாகவே சர்வதேச அளவில் பயன்படுத்தப்படுகிறது. உடல் மற்றும் மன சோர்வு, மன அழுத்தம், கவலை போன்றவற்றுக்கு நல்ல தீர்வாக இருக்கும்.