பல பலன்களை கொண்ட பனிவரகு நன்மைகள் ஏராளம்!!

பனிவரகு என்பது வரகு குடும்பத்தைச் சேர்ந்த சிறுதானிய வகை. இதில் ஈரப்பதம், புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, தாது உப்புக்கள் மற்றும் மாவுச்சத்து உள்ளன.

முதியவர்களுக்கு வரக்கூடிய ஞாபக மறதி நோயை போக்கும். உடலில் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.

உண்பதால் நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். மேலும் நரம்பு மண்டலத்தை பலமாக்கும்.

பனிவரகு உடலில் உள்ள சர்க்கரை அளவினை குறைக்க உதவும்.

சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும். மேலும் இளநரை, வயது முதிர்ந்த தோற்றம் போன்றவற்றை தடுக்கும்.

கணையத்தில் உண்டாகும் கற்களை கரைக்க செய்யும். கற்கள் உருவாகாமல் தடுக்கவும் உதவும்.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகளை போக்கும். கருவில் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு சிறந்தது.