வைட்டமின் டி சத்து நிறைந்த சில உணவுகள்

முட்டையின் மஞ்சள் கரு... இதில் அமினோ அமிலங்கள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை உடலில் வைட்டமின் டி சத்தை வளர்சிதை மாற்றம் செய்யக்கூடும்.

பால், சோயா பால், சீஸ் ஆகியவற்றில் வைட்டமின் டி மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

மீன் ஈரல் எண்ணெய் வைட்டமின் டி சத்தின் சிறந்த ஆதாரமாகும்.

சிப்பி அல்லது பட்டன் காளான்களை அடிக்கடி உணவில் சேர்க்கலாம்.

செறிவூட்டப்பட்ட தானியங்களில் ஆரோக்கியமான அளவில் உள்ளது.

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த மீன்களை உணவில் சேர்ப்பதன் மூலம் இயற்கையாகவே வைட்டமின் டி சத்தை அதிகரிக்கலாம்.

இவை தவிர நண்பகல் நேர சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதா கதிர்களின் வாயிலாக நம் உடலே வைட்டமின் டி3 மற்றும் டி2வை உற்பத்தி செய்யும்.