உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்க உதவும் பழங்கள் !

ஆப்பிள்... கலோரிகள் குறைவாக உள்ள நிலையில் நார்ச்சத்து அதிகமுள்ளது. இதிலுள்ள பாலிபினால்கள் உடல் பருமன் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன.

தர்பூசணியில் நீர்ச்சத்துள்ள அதிகமுள்ள நிலையில், கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது.

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அதேவேளையில் கலோரிகள் குறைவாகவே உள்ளன.

கொய்யா ஒரு குறைந்த கலோரி பழமாகும். இதில் அதிக நார்ச்சத்து உள்ளதால், பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது. ஒவ்வொரு கொய்யா பழத்திலும் 37-55 கலோரிகள் மட்டுமே உள்ளன.

அவ்வப்போது டயட்டில் திராட்சை பழங்களை சேர்க்கலாம்.

பப்பாளியில் வைட்டமின் ஏ, சி, செரிமான நொதிகள் நிறைந்துள்ளன; குறைந்த கலோரிகள் மட்டுமே உள்ளன. நீண்ட நேரம் பசியை தாங்கும் உணர்வை அளிப்பதால், ஆரோக்கியமாக உடல் எடையை குறைக்கலாம்.