பசிக்காமல் சாப்பிடக் கூடாது ஏன் தெரியுமா?

பசி இருக்கிறதோ, இல்லையோ, அவசர அவசரமாக, என்ன சாப்பிடுகிறோம் என்றே தெரியாமல், கிடைத்ததை விழுங்கி விட்டு, அரக்கப் பரக்க ஓடுகிறோம். ஆனால் முதலில் பசித்து சாப்பிட வேண்டும்.

பசிக்காமல் சாப்பிட்டால், தேவையான அளவு ஜீரண அமிலம் சுரக்காது; உணவு முழுமையாக செரிமானம் ஆகாது; உணவில் உள்ள சர்க்கரை, ரத்தத்தில் கலக்காது.

கழிவுகளை வெளியேற்றும் சிறுநீரகம், செரிமானம் ஆகாத உணவையும், கழிவு என, நினைத்து வெளியேற்றும்; அதனால் தான் ரத்தத்திலும், சிறுநீரிலும் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது.

உணவை நன்கு மெதுவாக மென்று, அதன் ருசி முழுவதும் கரையும் வரை வாயில் வைத்திருந்து விழுங்க வேண்டும். உணவில் உள்ள சர்க்கரையை செரிமானம் செய்யும் முதல் சுரப்பி, உமிழ் நீர்.

சாப்பிடும் போது, கவனம் முழுவதும், மொபைல் போன், 'டிவி' என இருக்கிறது. அதை முழுவதும் தவிர்க்க வேண்டும்

என்ன சாப்பிடுகிறோம் என்பதையே, பல நேரங்களில் கவனிப்பதில்லை. சாப்பிடும் போது, புலன் உறுப்புகளின் ஒத்துழைப்பு அவசியம். மென்று சாப்பிடா விட்டால், உணவு செரிக்காது.

இதனால் அஜீரணக் கோளாறுகள் வரும். இதன் அடுத்த கட்டம், நீரிழிவு பிரச்னை. உணவைப் பார்த்து, வாசனையை நுகர்ந்து, ருசித்து சாப்பிடும் போது, சுரக்கும் செரிமான அமிலத்திற்கு, உணவை மருந்தாக்கும் சக்தி உள்ளது.

பசிக்கும் போது தான் சாப்பிட்ட உணவு நன்கு செரித்து, சத்துகள் எல்லாம் உறிஞ்சப்பட்ட பின், கழிவுகள் வெளியேறயும்.