இரவு நேரத்தில் தயிர் சாப்பிடலாமா?

100 கிராம் தயிரில் 4 கிராம் கொழுப்பு, 3.2 கிராம் புரதம், 3 கிராம் மாவுச்சத்து, 150 மில்லி கிராம் கால்சியம், 0.2 மி.கி. இரும்புச்சத்து போன்றவை உள்ளன.

தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் எளிதில் ஜீரணமாக உதவுகிறது; இதய ஆரோக்கியத்துக்கு சிறந்தது.

இதிலுள்ள கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது. பற்கள் மற்றும் எலும்புகள் வலுவாக இருக்கவும் உதவக்கூடும்.

தயிரில் ஃபோலிக் அமிலம் அதிகமாக உள்ளதால், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏற்றது.

தயிர், நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதாகவும், குடல் புற்று நோயைத் தடுப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

சளி அல்லது காய்ச்சல் இருந்தால் முற்றிலும் தயிரை இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது. தயிருக்கு பதிலாக உணவு நன்கு செரிமானமாக மோரை சாப்பிடலாம்.

ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்புகள் கொண்டவர்கள் இரவு நேரத்தில் தயிர் மற்றும் தயிரால் செய்யப்பட்ட உணவுகளை தவிர்ப்பது சிறந்தது.

மற்றவர்கள் இரவில் தயிரை அப்படியேவோ அல்லது லஸ்சி, ரைத்தா என பிடித்தமான முறையில் தயிரை சேர்க்கலாம் என்பது டயட்டீசியன்களின் அட்வைஸாகும்.

தயிரில் செரிமானத்திற்கு உதவும் நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மோரை விட தயிர் சாப்பிடும் போது, செரிமானம் ஆக அதிக நேரமாகக்கூடும்.

தயிர் அல்லது மோருடன் எப்போதாவது, 1/4 டீஸ்பூன் மிளகு கலந்தும் சாப்பிடலாம். ஃபிரிட்ஜிலிருந்து தயிரை எடுத்து, உடனே சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்