டேஸ்டியான தேங்காய் பால் மில்க் ஷேக்
ஒரு மிக்ஸி ஜாரில் 1கப் தேங்காயை சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்து பாலை வடிகட்ட வேண்டும்.
அதனுடன் 2 ஏலக்காய் மற்றும் அரைத்த தேங்காயில் 1 கப் தண்ணீர் சேர்த்து மீண்டும் அரைத்து பால் எடுக்க வேண்டும்.
மிக்ஸி ஜாரில், ஊற வைத்த பாதாம், பிஸ்தா, முந்திரி, உலர்திராட்சை சேர்த்து அரைக்க வேண்டும்.
உலர் பருப்பு கலவையுடன் 1கப் தேங்காய் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
மிக்ஸி ஜாரில் தேங்காய் பால், அரைத்த பேஸ்ட், 4 தேக்கரண்டி வெள்ளைச் சர்க்கரை சேர்த்து அரைக்க வேண்டும்.
இறுதியாக நறுக்கிய உலர் பருப்பு தூவலைச் சேர்த்து அருந்தினால் சுவை அட்டகாசமாக இருக்கும்.