தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் மாங்காய் பச்சடி!
தேவையானவை: மாங்காய் - ஒன்று, துருவிய வெல்லம் - அரை கப், கடுகு, வெந்தயம் - தலா கால் தேக்கரண்டி, உப்பு - இரண்டு சிட்டிகை அளவு
பச்சைமிளகாய் - ஒன்று, நெய் - அரை தேக்கரண்டி, சுக்குத்துாள் - இரண்டு சிட்டிகை அளவு.
செய்முறை: மாங்காயை தோல் சீவி, பெரிய துண்டங்களாக நறுக்கவும்.
சிட்டிகை அளவு உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, குக்கரில் குழைய வேகவைத்து மசிக்கவும்.
வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டவும்.
கடாயில் நெய் சேர்த்து, பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி சேர்க்கவும்.
கடுகு, வெந்தயம், வடிகட்டிய வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்.
கெட்டியாகக் கொதித்து வரும்போது, மசித்த மாங்காய், சுக்குத்துாள் சேர்த்து, கலந்து இறக்கவும்.