மாலை நேர ஸ்நாக்ஸாக வெண்டைக்காய் பஜ்ஜி! ரெசிபி இதோ..
செய்முறை: முதலில் வெண்டைக்காயை, நன்றாக கழுவி ஒரு துணியில் வைத்து உலர்த்த வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு, தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் பிசைந்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையில் சோளமாவு, அரிசி மாவு, சமையல் சோடா, உப்பு, சீரக துாள், ஓமம் போட்டு நன்றாக கலக்கவும். இதை 20 நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும்.
அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் பொடியாக நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கவும்.
இதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வறுத்துக் கொள்ளவும். அதன்பின் தக்காளி, பச்சை மிளகாய் கலவையை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
அதன்பின் வெண்டைக்காய்களின் நடுப்பகுதியில் கத்தியால் வெட்டி எடுத்துக் கொள்ளவும். அதனுள் ஏற்கனவே தயாரித்துள்ள கலவையை நிரப்ப வேண்டும்.
அடுப்பில் வாணலியை வைத்து பொரித்து எடுக்க தேவையான அளவுக்கு எண்ணெய் ஊற்றவும்.
காய்ந்த பின் வெண்டைக்காய்களை, கடலை மாவில் முக்கியெடுத்து எண்ணெயில் பொரித்து எடுத்தால், சூடான வெண்டைக்காய் பஜ்ஜி தயார்.