உடல் ஆரோக்கியத்துக்கு ராகி டிரை புரூட் பால்

அடுப்பில் கடாயை வைத்து, சிறிது நெய் ஊற்றி காய்ந்தவுடன், 2 கப் ராகி அல்லது கேழ்வரகு மாவை போட்டு வறுத்து, நிறம் மாறிய பின் இறக்கி ஆற விடவும்.

இதில், பொடித்த சர்க்கரை அல்லது வெல்லம் மற்றும் சிறிதளவு நீர் சேர்த்து பிசையவும்.

தொடர்ந்து, பால் சேர்த்து பிசையவும். நீரை விட, பால் அளவு அதிகமாக சேர்த்து, உருண்டை பிடிக்கும் பதத்துக்கு பிசையவும்.

பொடித்த முந்திரிப்பருப்பு, பாதாம், திராட்சைகளை சிறிது நெய் விட்டு வறுத்து கலவையில் சேர்த்து, சிறு, சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.

இப்போது, 'ராகி ட்ரை புரூட் பால்ஸ்' ரெடி. குழந்தைகள் ஆர்வமுடன் விரும்பிச் சாப்பிடுவர்.

இனிப்பு விரும்பாதவர்கள், சர்க்கரை, வெல்லம் தவிர்த்தும் செய்யலாம்.