பொங்கல் ஸ்பெஷல் : கருப்பு கவுனி அரிசி சர்க்கரை பொங்கல் ரெசிபி!

இதெல்லாம் தேவை : கருப்பு கவுனி - 1 கப், பாசிப்பருப்பு - கால் கப், வெல்லம் - ஒன்றரை கப், தேங்காய் - கால் மூடி, ஏலக்காய் பொடி - கால் ஸ்பூன்

உலர் திராட்சை - 30, முந்திரி பருப்பு - 20 -25, நெய் - 100 மில்லி, பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை

கருப்பு கவுனி அரிசி வேக அதிக நேரம் எடுக்கும், அதனால் 2-3 மணி நேரத்திற்கு முன்பாகவே அலசி ஊற வைக்கவும். பின் பாசிப்பருப்பை வாணலியில் வறுத்து எடுக்கவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை கொதித்த பின் அதில் ஊற வைத்திருக்கும் அரிசியை சேர்த்து நன்கு வேக விடுங்கள். குக்கரில் வைத்தால் 10 விசில் வைக்கவும்.

அரிசி 60 சதவீதம் வெந்த பிறகு பருப்பை சேர்த்து வேகவிடவும். வெந்தவுடன் அதில் வெல்லப்பாகு சேர்த்து கிளற வேண்டும். இவை அனைத்தும் குழைந்து வேக வேண்டும்.

ஒரு சிறு கடாயில் சிறு சிறு தேங்காய் துண்டுகள், முந்திரி மற்றும் உலர் திராட்சையை நன்கு நெய்யில் வறுத்து எடுக்கவும்.

பின் பொங்கல் பதம் வந்தவுடன், ஏலக்காய் பொடி நெய்யை சேர்த்துக் கிளறவும். அதில் வறுத்த முந்திரி, உலர் திராட்சை தேங்காய்ச் சேர்க்கவும்.

கடைசியாக ஒரு சிட்டிகை பச்சை கற்பூரத்தையும் சேர்த்து கலந்தால் ஆரோக்கியமான கருப்பு கவுனி பொங்கல் ரெடி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.