கால்சியம் குறைபாட்டை நீக்கும் உணவுகள்
தற்போது எலும்பு தொடர்பான பிரச்னைகள் பலரிடமும் அதிகரித்து வருகிறது குறிப்பாக, சைவ உணவு சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களிடம் கூட.
எனவே, கால்சியம், வைட்டமின் - டி மற்றும் வைட்டமின் - பி 12 குறைபாடு உள்ளவர்கள், தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய, எளிதாக கிடைக்கும் சில உணவுகள் இதோ...
கால்சியம் குறைபாட்டுக்கு... கேழ்வரகு, கீரை வகைகள், தயிர், வெந்தய இலைகள், முளை கட்டிய பச்சைப்பயறு, நிலக்கடலை, ராஜ்மா, பனீர், பால், எள், ஆரஞ்சு, வெண்டைக்காய், முருங்கைக் காய், பாதாம், சோயா.
வைட்டமின் - டி குறைபாட்டுக்கு... தயிர், பாலாடை, வெண்ணெய், சோயா பால், காளான் உட்கொள்ளலாம்.
தினமும் அரை மணி நேரம், இளம் வெயிலில் இருக்க வேண்டும்.
வைட்டமின் - பி 12 குறைபாட்டுக்கு... பால், தயிர், பனீர், ஆப்பிள், வாழைப்பழம், காளான், பீட்ரூட், உருளைக் கிழங்கு, காபூலி சென்னா, கீரை வகைகள்.