தீபாவளி ஸ்பெஷல்... பாரம்பரிய அதிரசம் ரெசிபி

தேவையானப் பொருட்கள்: ஈர அரிசி மாவு - 2.5 ஆழாக்கு, 1 கிலோ அரிசிக்கு 1.25 கிலோ வெல்லம் தேவை. மாவானால் ஈரத்தால் அதிகம் கனக்கும். இதற்கு, 300 கிராம் பாகு வெல்லம் போதுமானது.

ஏலக்காய்த்துாள், நெய் - 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு, எள் - மேலே துாவ விருப்பமான அளவு.

வெல்லத்துருவல் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, கரைந்ததும் வடிகட்டவும்.

பிறகு இளம் முத்துப் பதம் வந்ததும் இறக்கி வைத்து, ஏலக்காய்த்துாள், சலித்த ஈர அரிசி மாவு சேர்த்துக் கொண்டே கிளற வேண்டும்.

நன்றாகப் பிசைந்து, கைப்பொறுக்கும் சூட்டில் நெய் பூசிய ஒரு பாத்திரம் அல்லது டப்பாவில் மாற்றி மூடி வைக்கவும்.

மேலே சிறிதளவு நெய் விடலாம். மறுநாள் தேவைப்பட்டால், இறுகியிருந்தால் சிறிது பால் தெளித்து பிசையவும்.

ஒவ்வொன்றாகத் தட்டி, சூடான எண்ணெயில் தனித்தனியாக போட்டு பொரித்து எடுக்கவும்.

தட்டும்போதே, சிறிது எள்ளை இருபுறமும் துாவி அழுத்தி, தட்டிவிட்டுப் பொரிக்கலாம்.