நோய் தீர்க்கும் கொய்யா!
ரத்த சோகையால் பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து, கொய்யாப் பழம் சாப்பிட்டு நலம் பெறலாம்.
இதை கடித்து சாப்பிடுவதால், பற்களும், ஈறுகளும் பலம் பெறும். சாலட் செய்து சாப்பிட்டால், உடல் குளிர்ச்சி அடையும்.
தொடர்ந்து சாப்பிட்டால், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர் மருத்துவர்கள்.
இது, பெருங்குடலை நச்சுத்தன்மையில் இருந்து காக்கிறது. ஆப்பிளை விட, அதிகமான சத்துக்கள் உள்ளன.
ஆரஞ்சுப் பழத்துடன் ஒப்பிட்டால், வைட்டமின் - சி சத்து கொய்யாவில், நான்கு மடங்கு அதிகம்.
கொய்யாவுடன், தேன் கலந்து சாப்பிட்டு வர உடல் வலுப்பெறும்; ரத்தம் சுத்தமாகும்.
தோலுடன் சாப்பிட்டு வர, முகத்துக்கு பொலிவையும், அழகையும் தரும். தோல் வறட்சியும், முதுமைத் தோற்றமும் நீங்கும்.
நன்றாக பழுத்த கொய்யாவுடன், மிளகுத் துாள், எலுமிச்சை சாறு கலந்து உட்கொண்டால் பித்தம், சோர்வு நீங்கும்.