கொலஸ்ட்ராலை குறைக்கும் காராமணி... பயன்களோ இன்னும் பல!
காராமணியில் கனிமச்சத்துக்கள், வைட்டமின் கே, சி, மாவுச்சத்து, பி காம்ப்ளக்ஸ், புரதச்சத்து, மக்னீசியம், தாமிரம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
சுமார் 1/2 கப் அளவு காரமணியில் 1 கிராம் கொழுப்பு உள்ளது. மேலும் இதில் உள்ள கரையக்கூடிய நார்சத்து, கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. இதய நோய் வராமல் பாதுகாக்கும்.
இதில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம் எலும்புகளை வலுவாக்க உதவும். எலும்புகள் உறுதியாகும்.
உடலின் நீர்ச் சமநிலையைப் பராமரிக்க, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க, இதயத் துடிப்பு சீராக இருக்க காராமணி உதவும்.
காராமணியைக் காய வைத்துப் பொடி செய்து, மிதமான வெந்நீரில் கலந்து குடிக்க வயிற்றுப் புண்கள் ஆறும்.
உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் காராமணியை எடுத்துகொள்ள வேண்டும். அதிகப் புரதம் உள்ளதால் இறைச்சிக்குப் பதிலாக இதைச் சாப்பிடலாம்.
மற்ற பயிறுகளை தாண்டி இது வாயு அதிகம் ஏற்படுத்தும் என்பதால் பெருங்காயம், சீரகம் சேர்த்தே பயன்படுத்தலாம். இல்லை என்றால் வயிற்று உப்புசம் ஏற்படும்.