ஆரோக்கியமான துாதுவளைக்கீரை கஞ்சி ரெசிபி

தேவையான பொருட்கள்: துாதுவளைக்கீரை - 1 கப், பச்சரிசி - 2 கப்,

மிளகு, சீரகம், பெருங்காயம், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு, பாசிப்பருப்பு மற்றும் வெந்தயம் - சிறிதளவு.

பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை தண்ணீரில் ஊற வைத்து நன்றாக வேக வைக்கவும்.

அதில், மிளகு, சீரகம், பெருங்காயம், வெந்தயம், துாதுவளைக்கீரை கலந்து கிளறி, உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.

இப்போது சுவையான மற்றும் சத்துகள் நிறைந்த, 'துாதுவளைக்கீரை கஞ்சி' ரெடி.

அனைத்து வயதினரும் விரும்பிச் சாப்பிடுவர். அடிக்கடி சாப்பிட சளித்தொல்லை தீரும்.