நன்மை நிறைந்த நூக்கோல்..மருத்துவ குணங்கள் தூக்கல்...
நூல்கோலில் உள்ள அதீத விட்டமின் கே சத்தானது இதயக் கோளாறுகள் வராமல் காக்கிறது.
நூக்கோலை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தியை அதிகரித்து, செரிமானத்தை சீராக்கும்.
நூல்கோலின் கீரையானது, உடலில் உள்ள கொழுப்பைப் பயன்படுத்தி பித்தநீரை உறிஞ்சிக் கொள்ளக் கூடியது.
மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்கள் வராமல் பாதுக்காக்கும்.
இதில் உள்ள பீட்டா கரோட்டின், ஆரோக்கியமான சவ்வுகள் உற்பத்தியாக உதவுவதுடன், நோய் எதிர்ப்புத் திறனையும் அதிகரிக்கக் கூடியது.
விட்டமின் ஏ அதிகமாக உள்ளதால், அது நுரையீரல் ஆரோக்கியத்துக்குப் பெரிதும் உதவுகிறது.
நார்ச்சத்து நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் வராது. எடைக் குறைப்புக்கு உதவும். கலோரிகளும் குறைவு.
கோடை காலங்களில் ஏற்படும் வியர்வை நாற்றத்தை நூல்கோல் சாறு குடிப்பதன் மூலம் தவிர்க்கலாம்.